விஜய் சேதுபதி இசையமைப்பாளராகிறார்!?

விஜய் சேதுபதி இசையமைப்பாளராகிறார்!?

September 21, 2018 0 By admin

படங்களை வரிசையாக நடித்து வரும் விஜய் சேதுபதி, பல அறிமுக இயக்குனர்களுடன் பணியாற்றியவர். இவர் மீண்டும் வெங்கட கிருஷ்ண ரொஹந்த் எனும் அறிமுக இயக்குனருடன் புதிய படத்தில் பணியாற்ற உள்ளார்.

ரொஹந்த் கூறும்போது, “நான் புரம்போக்கு என்கிற பொது உடமை படத்தின் இயக்குனர் எஸ்பி ஜெகன்நாதனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.

நான் இயக்கும் புதிய படம் இசை சார்ந்த படமாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி அந்த இசையமைப்பாளர் கதாபாத்திரத்தை செய்கிறார். ” என கூறியுள்ளார்.

அண்மையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகின்றார்.