அதிரடியாக களமிறங்கும் SAMSUNG A7!!

அதிரடியாக களமிறங்கும் SAMSUNG A7!!

September 21, 2018 0 By admin

மூன்று பிரைமரி கேரா, செல்பி கேமரா என மொத்தம் நான்கு கேமராக்களுடன் சாம்சங் A7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மொர்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சாம்சங், தற்போது மூன்று நிறங்களில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் சாம்சங் ஏ7 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, சாம்சங் ஏ7 போனின் மாடல் போட்டோக்கள், இணையதளங்களில் லீக் ஆகியது. அப்போது, அதில் மூன்று கேமராக்கள் இருப்பது போல் காட்சிளிக்கப்பட்டது. அப்போதே சாம்சங் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்தனர். இருந்தபோதிலும், அது உண்மை தானா என்ற சந்தேகமும் ஒருபுறம் ஏற்பட்டது. . 

(ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி! புகைப்படத்தொகுப்பு)

இந்நிலையில், இணையதளங்களில் கசிந்த சாம்சங் ஏ7 மாடல் உண்மை தான் என்று கூறுவது போல், மூன்று பிரைமரி கேமராக்களுடன் சாம்சங் ஏ7 அறிமுகமாகியுள்ளது. இந்த மூன்று கேமராவும் 24 எம்.பி , 8 எம்.பி, 5 எம்.பி என்ற வகையில் மெகாபிக்சல் அமைந்துள்ளது. இது தவிர24 எம்.பி செல்பி கேமராவும், அதற்கு டார்ச் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. நீலம், கருப்பு, கோல்டு என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள சாம்சங் ஏ7, இந்திய மதிப்பில்29,385 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.