251 ரூபாய் மொபைல் விற்பதாக அறிவித்த மோகித் கோயல் கைது

June 15, 2018 0 By admin

ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் விற்பதாக அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின், நிறுவனர் மோகித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் ‘ப்ரீடம் 251’ என்ற உலகின் மலிவு விலை ஸ்மார்ட்போனை ரூ.251-க்கு அறிமுகம் செய்தது. இதை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றது.

இதன்படி, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். அவர்களிடமிருந்து தலா ரூ.251 பெற்றுக் கொள்ளப்பட்டது. புக்செய்ய பலரும் இணையதளத்துக்கு வர, அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.

பின், ஈமெயில் மற்றும் செல்போன் எண்ணிலிருந்து ஒரே ஒரு ஸ்மார்ட்போனுக்கு மட்டும் புக் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வழியில் புக் செய்வதற்கு பணம் பெற்றுக்கொள்ளவில்லை

இத்துடன் அமோசான் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியது. ஆனால் யாருக்கும் மொபைல் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் பணம் பறித்தல் ஆகிய குற்றங்களின் பேரில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மோகித் கோயல் மற்றும் மேலும் இருவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.