ஆப்கான் வீரர்களையும் அழைத்துக் வெற்றிக் கோப்பையுடன் இந்திய கிரிக்கெட் அணி

June 16, 2018 0 By admin

பெங்களூருவில் நடைபெற்ற ஆப்கானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 நாட்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்றாலும் ஆப்கான் அணியினரின் கிரிகெட்டையும் அவர்களது உணர்வையும் டீம் இந்தியா மதித்து, பெருந்தனமையுடன் செய்த விஷயம் பரவலான பாராட்டுக்குரியதாகியுள்ளது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தங்கள் முதல் டெஸ்டிலேயே வலுவான இந்திய பேட்டிங்கின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல் அவுட் செய்ததே ஒரு பெரிய சாதனைதான், அதுவும் இந்தியப்பிட்சில்.

இந்நிலையில் இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 நாட்களில் வெற்றி கண்டு சாதனை படைத்தது.

இந்நிலையில் பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கோப்பையை பெற்ற இந்திய அணி பரிசளிப்பு மேடைக்கு ஆப்கான் நிர்வாகிகள், மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரையும் அழைத்தது இந்திய அணி. வெற்றி பெற்ற அணி தோல்வியடைந்த அணி வீரர்களுடன் கோப்பையுடன் கூடிய புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இந்திய அணியின் இந்தச் செய்கை பலத்த பாராட்டுகளை வரவேற்றுள்ளது.