yo-yo சோதனையில் தோனி,கோலி வெற்றி!! தோல்வியடைந்தார் அம்பதி ராய்டு!!

June 16, 2018 0 By admin

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்படும் யோ-யோ சோதனையில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அம்பதி ராய்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிநிர்வாகம், ஓவ்வொரு தொடருக்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனையை நடத்துகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும்.

இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக ஓடி நல்ல மதிப்பெண்களைப் பெற்ற கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்ட பலரும் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க தகுதிப்பெற்றனர்.

இந்த சோதனையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்ற அம்பதி ராய்டு, மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றதால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனால், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் அம்பதி ராய்டுவின் கனவு கண்ணீரில் முடிந்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து, ராய்டுவுக்குப் பதிலாக அணியில் வேறு வீரர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.